செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அதிமுக, பாமக சமூக நீதிக்கான கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக பாமக கூட்டணி சமூக நீதிக்கான கூட்டணி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பெரியம்பட்டி, புலிகரை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,“கொரோனோ தொற்று அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி பரப்புரை பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதிமுக, பாமக கூட்டணி சமூக நீதிக்கான கூட்டணி என்று கூறிய அன்புமணி ராமதாஸ். சமூக நீதி,சமத்துவம், வரலாறு எதுவும் மு.க ஸ்டாலினுக்குத் தெரியாது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அரசியல் வியாபாரிக்கும், விவசாயிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் முக்கியம் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.

Advertisement:

Related posts

வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது

Gayathri Venkatesan

முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Karthick

”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”- மு.க.ஸ்டாலின்!

Jayapriya