தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், “விவசாயிகளின் நண்பனாகவே பா.ஜ. கட்சி உள்ளது. இதுவரை , 1.16 லட்சம் கோடிரூபாய் விவசாய கடனுக்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது . விளை பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் நீண்ட காலமாக நம்பி வந்தனர் . இதன்படி , ஒட்டுமொத்த விவசாயிகளின் நலன் கருதியே வேளாண் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது . பஞ்சாப் பகுதி விவசாயிகள் ஒருசில காரணங்களால் போராடி வருகின்றனர் . விரைவில் அதற்கு தீர்வு எட்டப்படும் .
ஊழல் செய்வதே திமுகவின் நோக்கம் என குற்றம்சாட்டினார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என கூறிய அவர், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

Saravana

கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது- தமிழக அரசு!

Karthick

வேர்களுடன் கூடிய 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

Saravana