தமிழகம் முக்கியச் செய்திகள்

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பின் பேசியதாவது, “பொதுமக்கள் தொடர்ந்து 3 வாரங்கள் முககவசம் அணிவதை பின்பற்றினால்தான் கொரோனா பரவல் சங்கிலியை முறியடிக்க முடியும் என்றார். மேலும், சென்னையில் 18 ஆயிரத்து 852 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது வரை 5 ஆயிரத்து 759 பேர் மட்டுமே அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த முன்வருவோர் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த தடுப்பூசி திருவிழா நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

“மு.க.அழகிரியின் அரசியல் குறித்த முடிவுகளில் தலையிட எனக்கு அருகதை இல்லை” – கனிமொழி

Jayapriya

“நாங்கள் அனைவரும் உழைப்பால் வளர்ந்துள்ளோம்” முதல்வர் பழனிசாமி!

Karthick

வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!

Gayathri Venkatesan