செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள் வணிகம்

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை நாளை முதல்வர் வெளியீடு

சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் நாளை (16/2/21) நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சலுகைகளுடன் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நாளை கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அடிப்படையில் 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை, நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மணப்பாறை, ஓரகடம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி ஆகிய இடங்களில் சிப்காட் அமைப்பதற்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“கட்சியின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை”; அமைச்சர் ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

Dhamotharan

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

Nandhakumar

Leave a Comment