தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு விதித்துள்ளது. இதில் உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளிட்டவை, 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து உணவகங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்ததாகவும், இந்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
Advertisement: