நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு கலைமாமணி விருது பொறுவோர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பழம்பெரும் நடிகைகளான சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, மதுமிதா உள்ளிட்டோருக்கும் நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுவிற்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தயாரிப்பாளர்களில் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ்க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் இமான் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர்களில் சுஜாதாவிற்கும், ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்துக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.





