தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களுக்கும் ரூ. 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் 3-ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த மாவட்டத்துக்கு ரூ. 3 கோடி ஒதுக்கப்படுகிறது. 2- ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த மாவட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!

Ezhilarasan

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

Niruban Chakkaaravarthi