செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டி தனது குடும்பத்தார் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மூதாட்டி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேபோன்று சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் தொகுதியில் 95 வயதான மூதாட்டி வந்து வாக்களித்தார்.

Advertisement:

Related posts

”தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும்”- ரயில்வேத்துறைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!

Jayapriya

“தோனியை நானும் Miss செய்கிறேன்” – விரட் கோலி

Jeba

இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

Karthick