செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!

கொரோனா தொற்றால் இன்று 1,289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றில் இருந்து 668 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 75,035 நபர்களுக்கு நடப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,66,982 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று சிகிச்சைப் பலனின்றி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 668 ஆக பதிவாகியிருக்கிறது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 7,903 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,985 ஆக உள்ளது. சென்னையை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 138 பேருக்கும் கோவையில் 109 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

Niruban Chakkaaravarthi

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

Ezhilarasan

புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது!

Karthick