தான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்வதாக தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கினார். சென்னையை அடுத்த போரூர் சந்திப்பில் திறந்த வாகனத்தில் நின்றபடி பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்தார். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, தான் செய்வதையே ஸ்டாலின் சொல்லி வருவதாகவும் பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து, அம்பத்தூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி திமுக என விமர்சித்தார். அதிமுக ஆட்சியை எந்த காரணத்தாலும் திமுகவால் வீழ்த்த முடியாது என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வாங்கபட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
Advertisement: