மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கேற்ற அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றிப்பெறச்செய்து கோட்டையில் நமது கொடியை பறக்கச்செய்வோம் என ஓபிஎஸ், இபிஎஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்களுக்கான அதிமுக இயக்கத்தை உயிர்மூச்சுள்ளவரை காக்க, ஜெயலலிதா பிறந்தநாளன்று, தொண்டர்கள் உறுதிமொழி ஏற்கவும் வலியுறுத்தியுள்ளனர். மக்களுக்காக உழைத்து எதிரிகளை வீழ்த்தி, அதிமுக கொடியை பறக்கச் செய்ய வேண்டுமென என்றும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement: