தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

சட்டமன்றத் தேர்தல்; தேர்தல் ஆணையம் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன ?

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்றோடு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 • தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
 • வாக்கு மையத்தின் நுழைவாயிலில் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கண்டிப்பாக செய்யப்படும்.
 • உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் (அல்லது) மாலை கடைசி ஒரு மணி நேரம் வந்து வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
 • வாக்குச்சாவடிகளில் கைகளை சுத்தம் செய்யக்கூடிய சோப் தண்ணீர் மற்றும் கிருமிநாசினிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
 • சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, வாக்களிக்க வரும் நபர்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கக்கூடிய வகையில் வட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
 • வாக்களிக்க வருபவர்கள் முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அவர்களுக்கு வழங்க முகக் கவசங்கள் இருப்பு வைக்கப்படும்.
 • வாக்காளரின் அடையாளத்தை அறியவேண்டிய சூழல் வரும்பட்சத்தில் முகக் கவசத்தை கீழே இறக்கி அவர்கள் முகத்தை காண்பிக்கலாம்.
 • வாக்காளர் பட்டியலில் கையெழுத்திடவும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கவும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும்.
 • கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர்கள் என அனைவரும் பி.பி.இ கிட் அணிந்திருப்பார்கள்.
 • பயன்படுத்தப்பட்ட கையுறைகள் மற்றும் கழிவுகளை சேகரிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 • தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மாற்று ஏற்பாட்டுக்கு தேவையான பணியாளர்களும் அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
Advertisement:

Related posts

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

Ezhilarasan

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!

Saravana

தீவிர பரப்புரையில் எல்.முருகன்!

Jeba