தமிழகம் முக்கியச் செய்திகள்

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டைக்கே வரலாம்: மு.க.ஸ்டாலின்

விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிசாமி, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில், மதுரை வடக்கு, மேற்கு, மதுரை மத்திய, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் உன்னதமான திட்டம், கிடப்பில் போடபட்டுள்ளதாக விமர்சித்தார்.

ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவோம் எனவும், அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படமாட்டோம் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும், திமுகவில் கடந்த 50 ஆண்டுகளாக உழைத்து படிப்படியாக தான் வளர்ச்சியடைந்து வந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், மக்களிடம் இருந்து மனுக்களை பெறும் திமுகவின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 100 நாட்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களின் குறைக்கள் தீர்க்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார். அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால், மனுக்களை அளித்தபோது பெற்ற ஒப்புதல் சீட்டுடன், நேரடியாக கோட்டைக்கு வரலாம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சென்னை தாம்பரத்தில், தேர்தல் பரப்புரையில் பேசிய ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம், திமுக எனக் கூறினார். தன்னை விவசாயி என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை, ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Advertisement:

Related posts

வாக்களிப்பதில் ஆர்வமற்ற இளம் தலைமுறையினர்

Saravana Kumar

பெண்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்: திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!

Saravana

கொரோனா ஊரடங்கு: கோடீஸ்வரர்கள் சொத்து உயர்வு, லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

Saravana