தமிழகம் முக்கியச் செய்திகள்

தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

மேலும் நாளை தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ) கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!

Jayapriya

”ஆன்மீக அரசியலுக்கு வந்தால் கமலை ஏற்போம்”- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்!

Jayapriya

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

Gayathri Venkatesan