இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

மேற்கு வங்க தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில், ஆட்சியமைப்பதற்கு 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 108 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலை 9.30 மணி நிலவரப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாஜக அடுத்த இடத்தில் இருக்கிறது.

Advertisement:

Related posts

நடனமாடி வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர்!

Ezhilarasan

தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!

L.Renuga Devi

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர்; கமல்ஹாசன் கருத்து!

Saravana