ஆசிரியர் தேர்வு தமிழகம்

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.

தமிழக- கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அணையின் பாதுகாப்பு, உறுதித் தன்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி, மூவர் குழுவின் புதிய தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரான குல்சன்ராஜ் தலைமையில் இன்று அணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணியளவில் தேக்கடி படகு குழாம் வழியாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி மூவர்குழு ஆய்வு செய்த நிலையில், ஓராண்டு கழித்து மீண்டும் ஆய்வு செய்ய இருப்பதால் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மநீம தலைவர் கமலின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளயீடு!

Nandhakumar

சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!

Saravana

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

Saravana