இந்தியா செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்!

சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வும், அதைத் தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, புனே, போபால் ஆகிய பகுதியில் மண்டல அமர்வுகளும் தொடங்கப்பட்டன. இந்த அமைப்பு நாடு முழுவதும் சூழலியல் குறித்து மேலெழும் புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், புனேவின் பசுமை தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணனும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப உறுப்பினராக சத்யகோபலையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இம்மூவரின் பெயர்களையும் மத்திய அரசுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இலங்கை துணை தூதரகம் முற்றுகை: வைகோ கைது

Niruban Chakkaaravarthi

சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

Nandhakumar

ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற பாடுபவேன்: ஹரி நாடார்!

Gayathri Venkatesan