உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான எனிகாஸில் பணிபுரிந்து வரும் பெண் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பெண் ஊடகவியலாளர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த நான்காவது பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த மூன்று பெண்களின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆப்கனின் நகர்ப்புற பகுதிகளில் ஊடகவியலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து தாக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் காவல் துறையினர் தாலிபான் தீவிரவாத அமைப்புதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கும் என குற்றம்சாட்டிய நிலையில், தங்களுக்கும் தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த அமைப்பு மறுத்தது. தொடர்ந்து, தாங்கள் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கண்டனம் தெரிவித்தார்.

“பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாமிய நெறிமுறைகள், ஆப்கானிய கலாச்சாரம் மற்றும் அமைதிக்கு எதிரானவை. தற்போதைய நெருக்கடி மற்றும் பிரச்சனையை நீண்ட காலத்திற்கு நீடிக்கும்” என்று கானியின் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆளுநர் தமிழிசை!

Niruban Chakkaaravarthi

கடன் கொடுத்து ஏமாந்த பெண்; தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!

Jayapriya

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி… யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது!

Saravana