செய்திகள் முக்கியச் செய்திகள்

மநீம சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.21 முதல் விருப்ப மனு தாக்கல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 21-ம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையான சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தொகுதிக்கு ஒருமுறை விண்ணப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த தொகை கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.மேலும், தங்களது விண்ணப்பம் தேர்வானாலும், ஆகாவிட்டாலும் இத்தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்றும், நேர்மையான ஜனநாயகத்திற்கான பங்களிப்பாக அத்தொகை இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

Jayapriya

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை இழக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!

Jayapriya

பிரதமர் மோடிக்கு பரிசளித்த துபாய் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன்!

Jayapriya

Leave a Comment