தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.24 முதல் விருப்ப மனு தாக்கல்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனுவை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளனர். மேலும், தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாயாகவும், புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயாகவும், கேரளாவில் 2 ஆயிரம் ரூபாயாகவும், விரும்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: துரைமுருகன்!

Saravana

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Jayapriya

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

Jeba

Leave a Comment