செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

தொண்டாமுத்தூரை ஒரு முன்னோடி தொகுதியாக மாற்றி இருப்பதாக, அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையைில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கிவுள்ளது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கரடிமடை, சென்னனூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்த அவர், எந்த திட்டத்தை அரசு அறிவித்தாலும், அதனை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம், ஒரு முன்னோடி தொகுதியாக, தொண்டாமுத்தூரை மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

“நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும்”: ஜி.கே.வாசன்

Karthick

மழையில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!

Jayapriya

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

Gayathri Venkatesan