உலகம்

‘யாருப்பா நீ..’ இந்த சிறுவனுக்கு எலும்பு கூடு மட்டும்தான் நண்பனாமாம்….!

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் வால் டிஸ்னியின் அனிமேஷன் படங்களால் கவரப்பட்ட 2 வயது சிறுவன் தனது நண்பனாக எழும்புக்கூடு ஒன்றை வாங்கி விளையாடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குழந்தைகள் என்றால் தனது விளையாட்டுப் பருவத்தில் பொம்மைகள், கார்டூர் கதாபாத்திரங்கள் சூப்பர் ஹீரோக்களை தனது நண்பர்களாக நினைத்துக்கொண்டு அவர்கள் தொடர்பான பொம்மைகளுடன் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவன் எலும்புக்கூடை தனது நண்பனாக்கிக்கொண்டு தான் போகும் இடங்களுக்கெள்ளாம் அழைத்து சென்று வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வால் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை பார்த்து வந்த 2 வயது சிறுவன் அதில் ஒரு கார்டூன் சீரியலில் வரும் எலும்புக்கூடு கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஹாலோவின் வாரத்தில் 5 அடியுள்ள எலும்புக்கூடு பொம்மை ஒன்றை வாங்கிய அந்த சிறுவன் அதனை தனது நண்பனாக்கிக்கொண்டான்.

இப்போது வெளியில் எங்கு சென்றாலும் அங்கு தன் நண்பனாகிய எலும்புக்கூடு பொம்மையையுன் உடன் அழைத்து சென்று வருகிறான். மேலும் விளையாடும் தருணங்களிலும் சொந்த நண்பனாக பாவித்து எலும்புக்கூடுடன் அந்த சிறுவன் நேரத்தை கழித்து வருகிறான்.

Advertisement:

Related posts

கொலை முயற்சியில் இருந்து தப்பிய துனிசிய அதிபர் கைஸ் சையது..

Niruban Chakkaaravarthi

தேள் விஷத்தை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!

Jayapriya

விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

Jayapriya

Leave a Comment