திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து மதுரை சென்றடைந்தார். விமான நிலையம் அருகே, பெருங்குடி பகுதியில் அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என தெரிவித்தார்.
திமுகவில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் மகன் தற்பொழுது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து ஸ்டாலின் பேரனும் அரசியலுக்கு வர தயாராக உள்ளாக கூறினார். திமுக ஆட்சி, ஏழைகளுக்கான ஆட்சியாக இருந்ததில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
Advertisement: