செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் ரேணுகாதேவி (வயது 28). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரும் மயிலாடுதுறை அருகே உள்ள மங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனபால் மகன் கோபிநாத் (வயது 30) என்பவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாகக் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. அதையடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூர் ரயில்வேகேட் அருகே ரேணுகாதேவியும் கோபிநாத்தும் விஷமருந்தியதாக தெரிகிறது.

இதில் ரேணுகாதேவி இறந்துவிட்டார், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் கோபிநாத் நன்னிலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

ஈரோடு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சோகம்!

Saravana

சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதி!

Niruban Chakkaaravarthi

“ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ராஜ்நாத் சிங்

Niruban Chakkaaravarthi

Leave a Comment