திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ஒன்றரை கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையானது ஆந்திர தமிழக எல்லையின் நுழைவு பகுதியாகும். இவ்வழியாக தொடர்ந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜ் (30) பேரிட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் (29) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய புல்லட் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர்.
விசாரணைக்கு பின்னர் ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.