தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி!: திருமாவளவன் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என அரசாணை பிறப்பித்ததற்கு, முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

வாத்தி கம்மிங் பாடல் ஒரே நாளில் சாதனை!

Niruban Chakkaaravarthi

பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

Jayapriya

அதிமுகவில் டிடிவி தினகரன்?

Niruban Chakkaaravarthi

Leave a Comment