செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

“தமிழகத்தில் ஏழை என்ற சொல்லை நீக்குவதே எனது லட்சியம்!” – முதல்வர்

கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக என முதலமைச்சர் பழனிசாமி சேலம் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய அவர் ஜெயலலிதா அறிவித்தபடி கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை 18 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது அதிமுக அரசு என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் தாய்மார்கள் பயன் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிரித்தார். ஏழை என்ற சொல்லை தமிழகத்தில் இருந்து நீக்குவதே எனது லட்சியம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார்.

Advertisement:

Related posts

சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு!

Arun

25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!

Jeba

சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!

Nandhakumar