செய்திகள் முக்கியச் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்திருப்பதாக அக்கட்சியின் மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜம்முவில் இன்று நடைபெற்ற அமைதி மாநாடு என்ற கூட்டத்தில் ஒன்றிணைந்து பங்கேற்றனர். அப்போது பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்திருக்கும் உண்மையை தாங்கள் பார்த்து வருவதாக கூறி உள்ளார்.

இதனால்தான் தாங்கள் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய இன்னொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, கட்சியின் நலனுக்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகவும், எனவே கட்சி வலுவடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். தங்களுக்கு வயதாவது போல கட்சி வலுகுறைவதை விரும்பவில்லை என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜ்ப ப்பர், மகாத்மா காந்தியின் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை முன்னெடுத்தும் செல்லும் வகையில் காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

20 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற கொடூரம்!

Niruban Chakkaaravarthi

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Jayapriya

தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan