கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும், மனைவி மாயாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாயா கணவனை பிரிந்து குழந்தையோடு அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த விபின், தாயுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்தார். மேலும், மனைவி பிரிந்து சென்றதால், தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு விபினும் தற்கொலை செய்து கொண்டார். கடிதத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement: