செய்திகள்

7 பேர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் பாண்டியராஜன்

7 பேர் விடுதலை குறித்து தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை என்று கூறினார். இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி ஏழுபேர் விடுதலை குறித்து அறிவிப்பார் என்றும் அவர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவுபடுத்தினார்.

Advertisement:

Related posts

மெட்ரோ ரயில் நிலையப் பணியில் திருநங்கை: பொதுமக்கள் வரவேற்பு!

Niruban Chakkaaravarthi

தமிழகம் வெற்றி நடை போட்டால் தாங்கள் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து!

Saravana

பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!

Jeba

Leave a Comment