தமிழகம்

பொங்கலுக்கு பிறகு புதிய கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்!

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பொங்கலுக்கு புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் இருக்கும் மகனை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்து அதற்கு மாநில தலைவரையும் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய் தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருந்தார். மேலும் தனது தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளையும் நியமித்தார். இதனிடையே விஜய்யின் தாயார் ஷோபா அந்த பதவியிலிருந்து விலகியதால் கட்சியை பதிவு செய்ய வேண்டாமென சந்திரசேகர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் புதிய கட்சி ஒன்றை பொங்களுக்கு தொடங்கவுள்ளதாக தகவல் வெளிகியாயுள்ளது. இதில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை இணைக்க முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு 20 மாவட்ட பொறுப்பாளர்களை எஸ்.ஏ சந்திரசேகர் நியமித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே புதிய பெயரில் கட்சியை பதிவு செய்துள்ள இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக கட்சி குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

Saravana

”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

Jayapriya

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்

Nandhakumar

Leave a Comment