குற்றம் முக்கியச் செய்திகள்

மகளின் திருமண செலவுக்கு பணம் இல்லாததால், தற்கொலை செய்து கொண்ட தாய்!

தாம்பரம் அருகே தனது மகளின் திருமண செலவுக்கு பணம் இல்லாததால், வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரத்தை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர்கள் செழியன் – நிர்மலாதேவி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் மகளுக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், அடுத்த மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மகளின் திருமண செலவுக்கு போதிய பணம் இல்லாததால், பலரிடம் நிர்மலாதேவி, கடன் கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், நிர்மலா தேவி தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya

இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!

Saravana

தாய், தந்தையின் ஆதரவின்றி பசியால் வாடும் 6 வயது சிறுவன்; மனதை உருக வைக்கும் நிகழ்வு!

Jayapriya

Leave a Comment