தமிழகம் முக்கியச் செய்திகள்

வரும் 23-ம் தேதி தாக்கலாகிறது தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்!

2021-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற 23-ம் தேதி காலை 11 மணியளவில் வாலாஜா சாலையில் உள்ள கலைவானர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

பொங்கல் பரிசு, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி உட்பட தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் இந்த கூட்டத்தில் இடம்பெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தை எவ்வளவு நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து, வரும் 23 ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதி!

Jayapriya

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Saravana

25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!

Jeba

Leave a Comment