குற்றம் முக்கியச் செய்திகள்

மாற்றுத்திறனாளியான மகனை கொலை செய்த தந்தை!

குஜராத்தில் பணம் இல்லாததால் மாற்றுத்திறனாளியான மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கூலி வேலை செய்பவர் ஹரிஷ் காமி. இவருக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி மகனும் மற்றும் 6 வயதில் மகளும் உள்ளனர். அவருடைய மகனின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், மகளின் கண் எதிரே மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அண்ணன் துடித்தை பார்த்து சிறுமி கதறி அழுத்தாள். இதுகுறித்து வெளியில் கூறினால் அவரையும் கொலை செய்து விடுவதாக மகளையும் மிரட்டியுள்ளார். பின்னர், ஹரிஷ், தனது மகன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து உறவினர்கள் அனைவரும் அவருடைய வீட்டிற்கு வந்தனர். பின்னர், அந்த சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்துள்ளனர். அண்ணனின் இறப்பு குறித்து ஹரிஷின் மகள் மாமாவிடம் உண்மையை தெரிவித்தாள். ஆரம்பத்தில், இயற்கை மரணம் எய்தியுள்ளதாக நினைத்த அவர், உண்மை அறிந்ததும் ஹரிஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து, போலீசார் அச்சிறுவனின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, ஹரிஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

இடைக்கால பட்ஜெட்: அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை!

Nandhakumar

போக்குவரத்து காவலரை தாக்கிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

Niruban Chakkaaravarthi

சட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!

Nandhakumar