புதுச்சேரியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் 116 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 324 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆதார், புகைப்படம் ஒட்டிய வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகளில், 330 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பணம், மதுபானம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள், என பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு, சுமார் 37 கோடி ரூபாய் என, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement: