தமிழகம் முக்கியச் செய்திகள்

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால்தான் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்தது! -ஜெய்சங்கர்

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதே, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்க காரணம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, வேறு சில நாடுகளை போன்று, இந்தியாவும் அதனை எதிர்கொள்ள முழு அளவில் தயாராகவில்லை என தெரிவித்தார். ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால், சுகாதார பணிகளை மேற்கொள்ள தயாராவதற்கான அவகாசம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாகவே, உலக நாடுகளுடனான ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், உலகில் அதிக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமணம்

Jayapriya

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

அவையில் எம்.பிக்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு வெங்கைய்யா நாயுடு கண்டனம்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment