தமிழகம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே, பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்புக்குப் பிறகே, பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதி மக்களுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன்பிறகு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தான் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என கூறினார். பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது என தெரிவித்த அவர், பள்ளிகளில் வாக்கு சாவடிகள் அமைய உள்ளதால், தேர்தல் அறிவிப்பை பொறுத்து பொதுத் தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறினார்.

Advertisement:

Related posts

”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Nandhakumar

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

Jayapriya

Leave a Comment