செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது!” ராகுல் காந்தி புகழாரம்!

தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது! தமிழர்களின் பண்பாட்டிற்கு இணையாக யாரும் இருக்க முடியாது” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சேலம், சீலநாயகன்பட்டியில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ராகுல் காந்தி, “உங்களுடைய பண்பாடிற்கும், வரலாறுக்கும் இணையாக யாரும் இருக்க முடியாது என்பதை என்னால் உணர முடிகிறது” என கூறியுள்ளார்.

மேலும், “உங்களுடைய பண்பாடும், வரலாறும் தனிச்சிறப்பானது. உங்களுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன். எந்த வித சந்தேகமுமின்றி உங்களை நம்புகிறேன். உங்கள் பண்பாட்டின் மீதான தாக்குதலை நீங்கள் பொறுத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஸ்டாலினை முதலமைச்சராக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த முடிவை ஒப்புக் கொள்கிற விதமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் போர் இத்துடன் முடிவதில்லை. ஆர்.எஸ்.எஸ். பிஜேபியும் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால் மீண்டும் நுழையமாட்டார்கள் என்பது கிடையாது. மீண்டும், மீண்டும் முயற்சிப்பார்கள். முதலில் தமிழ்நாட்டில் இருந்து துரத்திவிட்டு, டெல்லியில் இருந்தும் அகற்ற வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்ற பாதிப்பில் அகப்பட்டு தவிக்கிறது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. அமைப்புகள் அழிக்கப்படுகிறது. சிலருக்கு பணம் சேர்வதற்காக, நம்முடைய பண்பாட்டினை விலை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு போராட்டங்களிலும் அவர்கள் நிச்சயம் வெல்ல முடியாது” என ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்திற்கு வருகிறது மத்தியக் குழு!!

Karthick

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.சாந்தா காலமானார்!

Niruban Chakkaaravarthi

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

Nandhakumar