ஆசிரியர் தேர்வு தமிழகம்

“அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்திருந்திருந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட சாலை அமைக்க, 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை – சேலம் 8 வழிச்சாலை அடுத்தாண்டுக்குள் செயல்படுத்தப்படும், என்றும் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:

Related posts

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

Saravana

“எழுவர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது” – ஓ.பி.எஸ்

Jayapriya

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Saravana Kumar