செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“முதல்வர் பல்லாண்டு வாழ்ந்து திமுக சாதனைகளை பார்க்க வேண்டும்” -மு.க.ஸ்டாலின்!

தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டு பயத்தில் உயிரை விடுவேன் என்றெல்லாம் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றும், “ஆனால் அவர் பல்லாண்டு வாழ்ந்து திமுக மக்களுக்கு செய்யும் திட்டங்களை பார்க்க வேண்டும்” என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்தியூர், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டு பயத்தில் உயிரை விடுவேன் என்றெல்லாம் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றும், “ஆனால் அவர் பல்லாண்டு வாழ வேண்டும், வாழ்ந்து திமுக மக்களுக்கு செய்யும் திட்டங்களை பார்க்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. முன்னதாக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்., ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு : ஆசிரியையின் அதிர்ச்சி தகவல்

Niruban Chakkaaravarthi

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

Saravana

கர்ணன் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Karthick