குற்றம் முக்கியச் செய்திகள்

அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி!

சென்னை எண்ணுரில் கதவைத் திறக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பெயின்டராக வேலை செய்துவருகிறார். இருவடைய தம்பி ரமேஷ். பெற்றோர் இறந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர். கடந்த 11ம் தேதி கூலி வேலை செய்யும் ரமேஷ் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளார். வெகுநேரமாகியும் தூக்க கலக்கத்தில் இருந்த சுரேஷ் தாமதமாக வந்து கதவை திறந்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்பு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளனர். இதனையடுத்து திடீரென நள்ளிரவில் தம்பி ராஜேஷ் ஆத்திரம் அடைந்துள்ளார். ஆத்திரம் அடங்காத ரமேஷ் வீட்டில் இருந்து 4 கிலோ எடையுள்ள கல்லை தூக்கி அண்ணன் சுரேஷின் தலையில் போட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின், ராஜேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்வபம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!

Karthick

ராகுல் காந்தி தமிழக வருகை: பிரச்சார தேதிகள் அறிவிப்பு!

Saravana

கின்னஸ் சாதனை படைத்த 23 வயது இளைஞன்!

Jeba