தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் வெற்று அறிக்கையே: வேல்முருகன்

திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இரண்டு நாட்களில் அதிகார பூர்வ அழைப்பு வரும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத்  தலைவர்  கே.பாலு நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சேலம் வந்த வேல்முருகன், அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நிதியே ஒதுக்காமல், அதிமுக அரசு அறிவித்துள்ள விவசாய கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெறும் வெற்று அறிவிப்புகள் என்றார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்கிறது- எல்.முருகன்!

Jayapriya

கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கார்கள் திருட்டு; அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!

Saravana

காட்சில்லா vs கிங்காங் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

Jayapriya