தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை: பிரகாஷ் காரத்

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பா.ஜ.க தலைமையிலான நரேந்திரமோடி ஆட்சி நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டி உள்ளார்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் தேர்தல் பரப்புரை மாநாடு தொடக்க விழா நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்கு தமிழகத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றார். அதிமுகவை கருவியாக பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை என்றும் இந்த அரசை பாஜகதான் பின்னாலிருந்து இயக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் அரசை விமர்சனம் செய்து கருத்துக்கள் தெரிவித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படாமல் அம்பானி அதானி ஆகியோருக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக பிரகாஷ் காரத் கூறினார்.

Advertisement:

Related posts

அப்டேட் கேட்ட ரசிகர்கள்! அறிக்கை விட்டு அட்வைஸ் செய்த அஜித்!!

Niruban Chakkaaravarthi

இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!

Jayapriya

கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!

Gayathri Venkatesan