செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்

வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன், வழக்கறிஞர் நவாஸ், செயற்குழு உறுப்பினர் சூரியபிரகாசம் ஆகியோர், தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரியபிரகாசம், இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். வேளச்சேரி தொகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த அவர், குறித்த நேரத்திற்குள் விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது குறித்து காங்கிரஸ் கட்சியில் சார்பில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது. வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் வழக்கறிஞர் நவாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சூரியபிரகாசம் ஆகியோர் புகார் மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய சூரியபிரகாசம், வேளச்சேரி விவகாரம் தொடர்பாக விசாரிக்க உடனடியாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது! – அமைச்சர் செங்கோட்டையன்

Saravana

கன்னியாகுமாரியில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

Saravana