உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

தாய்லாந்து மீனவ சகோதரர்களுக்குச் சிக்கிய பலக்கோடி மதிப்பிலான அரியவகை முத்து!

தாய்லாந்தில் மீனவர் ஒருவருக்கு மிகவும் அரிதான ஆரஞ்சு முத்து கடல் சிப்பிக்குள் இருந்து கிடைத்துள்ளது. அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில், நக்கான் சி தமரத் கடற்கரைப் பகுதியில் கடந்த 27ஆம் தேதி, ஹட்சை (37) மற்றும் வரசாட் ஆகிய இரு சகோதரர்கள், கடலில் இருக்கும் நத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மூன்று சிப்பி நத்தைகளை உண்பதற்காகப் பிடித்துள்ளனர். அவர்களின் தந்தை அந்த நந்தைகளின் ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து உடைத்து சுத்தம் செய்தபோது, அதிர்ஷ்டவசமாக ஒரு நத்தையின் சிப்பிக்குள் மிக அரிதான ஆரஞ்சு முத்து ஒன்று கிடைத்துள்ளது. இது தந்தை, மகன்கள் ஆகிய மூவரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அந்த அரியவகை முத்தை அக்குடும்பத்தினர், சீனா வியாபாரி ஒருவரிடம் விற்பதற்கு இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு பேரம் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதுவரை மூன்று வியாபாரிகளை அவர்கள் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆரஞ்சு முத்தானது, 7.68 கிராம் எடையும், ஆசியக் கடல்களில் இது போன்ற முத்துகள் உருவாவதற்குப் பல ஆண்டுகள் காலம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மேலும் இந்த வகை முத்து பெரும்பாலும் ஆரஞ்சு, பிரவுன் நிறங்களில் காணக்கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

அலைபாயுதே பாணியில் காதல் திருமணம்…. சில நாட்களிலேயே நடந்த விபரீதம்!

Saravana

தந்தையிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 11வயது சிறுவன்!

Jayapriya

திருக்குறளை மேற்கோள் காட்டி பொங்கல் விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

Saravana

Leave a Comment