உலகம் முக்கியச் செய்திகள்

ஹேர் ஸ்ப்ரேயால் வந்த வினை: இளம் பெண் தவிப்பு!

அமெரிக்காவில் டெசிகா பிரவுன் என்பவர் கொரில்லா க்ளூ ஸ்ப்ரே பயன்படுத்தியால் முடி தலையிலேயே ஒட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் லுசியானா பகுதியை சேர்ந்தவர் டெசிகா பிரவுன். இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தலைமுடியை பராமரிக்க வழக்கமாக உபயோகிக்கும் ஹேர் ஸ்ப்ரேவுக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியாக தெரிவித்தார். பின்னர் அதனால் தலைமுடிக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் தெரிவித்திருந்தார்.

இதனை பயன்படுத்திய பிறகு அவரது முடி தலையிலேயே இறுக்கமாக ஒட்டிக் கொண்டது. பின்னர், இந்த வீடியோவை பார்த்த கொரில்லா க்ளூ நிறுவனம் அவரின் நிலையை அறிந்து மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டது.

மேலும் இந்த வீடியோ பல பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். இதையடுத்து, பிப்ரவரி 6ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் சுற்றிவரும் விண்கலத்தை இயக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி!

Niruban Chakkaaravarthi

திருக்குறள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது: ஜே.பி.நட்டா

Niruban Chakkaaravarthi

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

Jeba

Leave a Comment