இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்!

நிலக்கடலை ஓட்டிலிருந்து பூந்தொட்டிகளை உருவாக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தில் சின்டல் குண்டா பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஸ்ரீஜா. இவர் படித்துவரும் பள்ளியில், ஒவ்வொரு மாணவர்களின் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட அப்பள்ளி நிர்வாகம் மூலம் ஊக்கவிக்கப்படுவார்கள். அந்த வகையில் செடிகளை நடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தொட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனை கவனித்து வந்த மாணவி ஸ்ரீஜா, பிளாஸ்டிக் தொட்டிகள் பயன்பாட்டியை தவிர்க்க நினைத்துள்ளார். கத்வால் மாவட்டத்தில் நிலக்கடலை அதிகம் சாகுப்படி செய்யப்படுவதால், கடலையின் ஓட்டைக் கொண்டு பூந்தொட்டி செய்யும் யோசனை அவருக்கு வந்துள்ளது.

அதையடுத்து நிலக்கடலையின் ஓட்டை எடுத்து உடைத்து அதை பொடியாக்கி தண்ணீரில் குழைந்து பூந்தொட்டியை செய்திகாட்டி அசத்தியுள்ளார். இதற்கு அவரின் கணித ஆசியர் உறுதுணையாக இருந்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் இந்த நிலக்கடலை ஓட்டில் செய்யப்பட்ட பூந்தொட்டிகளை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீஜாவின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து ஸ்ரீஜாவிற்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஐந்தில் இருந்து ஆறு பூந்தொட்டிகளை செய்வதாகவும் தனது இந்த முயற்சிக்கு தெலங்கானா அரசு முன்வந்து தொழில்நுட்ப மூலம் உதவியை வழங்கினால் மேலும் அதிக எண்ணிக்கையில் தொட்டிகளை தயாரிக்கலாம் இதனால் பிளாஸ்டிக் தொட்டி பயன்பாடுகளை தவிர்க்க முடியும் என ஸ்ரீஜா கருதுகிறார்.

Advertisement:

Related posts

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Jayapriya

சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து!

Niruban Chakkaaravarthi

அடுத்த ஆனந்த் யார்? கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்!

Jayapriya

Leave a Comment