இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

சீன போர் விமானத்தை விட இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் சிறந்தது; விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கருத்து!

இந்திய விமானப்படையில் புதிதாக இணையவுள்ள தேஜாஸ் எம்.கே – 1ஏ இலகு ரக போர் விமானம் சீனா – பாகிஸ்தானிடம் உள்ள ஜெ.எஃப் 17 ரக போர் விமானங்களை விட சிறந்தது என விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான எல்லை மோதலை தொடர்ந்து இந்தியா தனது பாதுகாப்பு தளவாடங்களை அதிகரித்து வருவதோடு நவீனப்படுத்தியும் வருகிறது. இதில் ஏற்கனவே அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தேஜாஸ் எம்.கே – 1ஏ இலகு ரக போர் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 73 விமானங்களையும், 10 பயிற்சி விமானங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஏ.இ.எஸ்.ஏ ரேடார் , வானில் பறந்த படியே வேறு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதி, நவீன ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படும் இந்த தேஜஸ் போர் விமானம் விரைவில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தெரிவித்துள்ள விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா, இது நமது உள்நாட்டு உற்பத்திக்கு மிகப் பெரிய ஊக்கம். 83 பேர் விமானங்கள் நமது நான்கு படைப்பிரிவுகளையும் கவனிக்கும். இலகுரக போர் விமானங்களின் படைப்பிரிவின் 2 ஆக இருந்தது. தற்போது 6 ஆக மாறியுள்ளது. இந்தியாவின் தேஜாஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டு முயற்சியால் உருவான ஜெ.எப் – 17 போர் விமானத்தை விட சிறந்தது மற்றும் நவீனமானது. என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Niruban Chakkaaravarthi

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

Saravana

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

Saravana

Leave a Comment