தமிழகம் முக்கியச் செய்திகள்

புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்து தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து திருவள்ளுவரை காவிசாயம் பூசிவருவதோடு திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள் அடக்க முயல்வதாக எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கும் படத்துடன் பாடமாக வைத்து அவமதித்து உள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பலைக்கலைக்கழக மாணவ மாணவிகள் பல்லைக்கழக வாயில் முன்பு திருவள்ளுவர் படங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சி.பிஎஸ்.சி பாடத்திட்டத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை நீக்கவேண்டும் இல்லை என்றால் நாடு தழுவிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாகவும் எச்சரித்தனர்.

Advertisement:

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

Nandhakumar

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

Jayapriya

”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

Jayapriya