தமிழகம் முக்கியச் செய்திகள்

நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தொழிலாளர் நல ஆணையரிடம் ஏற்கனவே தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.


இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தரப்பில் சாதகமான பதில் வரவில்லை என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கருதுகின்றனர். இந்த நிலையில், 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் பேருந்துகள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை!

Jayapriya

போலி இன்சூரன்ஸ் நிறுவனம்…. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Jeba

தொழில் அதிபர் காரை மர்ம நபர்கள் கடத்தியதாக வந்த புகார்…. காரை மீட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Saravana